ஒன்று எனக்கு இன்றும் விளங்கவில்லை யார் உயிர் பெரிதென்று அது இந்தியாவின் இரு பெரும் தலைகள் இறந்த கதை ஆம் இந்திராவா??? ராஜீவா? யார் உயிர் பெரிது???
இந்திராகாந்தியை சீக்கியன் கொன்றான் அவன் சார்ந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை அரவணைத்து சிவப்பு கம்பள வரவேற்புடன் பிரதமராகியிருக்கிறார் சோனியா ஆனால் ராஜீவ்காந்தியை தமிழன் கொன்றான் என்கின்றனர் அதற்கு பழிதீர்க்க லட்சோபலட்ச எம் தமிழ் உறவுகளை அழித்தும் வெறி அடங்கியதாய் தெரியவில்லை அந்த சோனியாவிற்கும் ராகுலுக்கும்.
பிரான்ஸ்லே சீக்கியனுக்கு மயிர் பிரச்னை என்றவுடன் இந்திய பிரதமராய் இருந்த மன்மோகன் விரைந்து சென்று தீர்வுகண்டார் அனால் தொட்டுவிடும் தொலைவில் உள்ள எம் ஈழத்திலே என் உறவுகள் உயிர்வாழ போராடிய போது தமிழனின் உயிர் என் மயிருக்கு சமம் என இருதுவிட்டார் மன்மோகன் சிங் அப்படியானால் சீக்கியனின் மயிர் உயிருக்கு சமம் தமிழனின் உயிர் அவர்களின் மயிருக்குகூட சமம் இல்லையா??? எங்கேயடா சென்றது உங்களின் ஜனநாயக மனிதாபிமானம்???
பெரிய காரணம் ஏதும் இன்றி உன் மாமியாரை கொன்றவனுக்கு மனதிலே இடமளித்து இந்திய தேசத்து பிரதமராய் சிம்மாசனத்தில் அனால் உன் கணவனை எதற்காக கொன்றனர் என்ற காரணத்தை நன்கு அறிந்தவளாய் இருந்தும் அழிக்கிறாய் தேடி தமிழனை இன்றுவரை ஈழத்திலே இனிமேல் இந்திய அரசியலிலா??? ஏய் ரத்தகாட்டேறி உன் கணவன் ஒருவனின் உயிர்காக இன்னும் எத்துனை உயிர்களை உறிஞ்ச போகிறாய்? உலகே கூறுகிறது உன் கூட்டாளி போர்க்குற்றவாளி என்று உன்னின் பதில் தேவை இல்லை தமிழனுக்கு... காலம் உணர்த்தும் உனக்கு தமிழன் யார் என்று?
உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக நேரு குடும்பம் என்பதை மறைத்து காந்தி என அடைமொழியிட்டவர்கள் நீங்கள் அதே அடைமொழியுடன் இன்னும் எத்தனை காலம் ஆளுவீர்கள் பார்க்கலாம் அதையும் உன்னின் இந்த அகம்பாவ ஆட்சிகாலத்திலேயே எமக்கான தமிழ் ஈழம் மலரும் எம் உறவுகள் அங்கே சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் அப்போது புரியும் உனக்கு தமிழன் யாரென்று???
இந்திராகாந்தியை கொன்ற வீர சீக்கியர்களுக்கு இந்திய தேசத்தின் தலைமையிடம் ராஜீவை கொன்றவர்கள் என கூறும் கோழை தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்களா???
தமிழினமே விழித்துக்கொள்!!! சோனியா அரசின் கையாலாகாத தனத்தால் சீனர்கள் இலங்கையிலே ஆழமாக காலூன்றிவிட்டார்கள் வடக்கிலே சீனர்களின் ஆக்கிரமிப்பை தட்டிகேட்க்கமுடியாத எம் இந்திய அரசு நாளை தெற்கிலே இலங்கையில் இருந்து சீனா தாக்குதல் தொடுத்தால் அங்கே பாதிப்பதும் தமிழன் தான் ஆம் இன்று அருணாச்சல் பிரதேசத்தில் நடப்பது தான் நாளை இங்கேயும் நடக்கும் ஆதலால் இப்போதே விழித்துக்கொள் தமிழினமே! எதிர்காலத்தில் எமது பாதுகாப்பு கருதியேனும் எழு கோடி மக்களின் ஒருமித்த குரலாய் ஒலிக்கட்டும் தனி தமிழ் ஈழமே ஒரே தீர்வு! இந்திய அரசே ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவி என்று!
என்றும் தமிழுணர்வுடன்
பி.ரா.வ
No comments:
Post a Comment